கரிச்சான் பன்னாட்டு பன்னோக்கு தமிழியல் ஆய்விதழ்

அறிஞர்களால் மதிப்பீடு செய்யப்படும் பன்னாட்டு ஆய்விதழ்

Karichan International Multidisciplinary Tamilology Research Journal

கட்டுரை தேர்வு செய்யும் அமைப்பு

வெளியீடு மற்றும் மதிப்பீட்டு கொள்கை:

ஆய்வுக் கட்டுரைகள் இணையதள வெளியீடாக மட்டும் வழங்கப்படும். ஆய்வுக் கட்டுரைகள் இரு அக மதிப்பீட்டு முறைக்கு உட்படுத்தப்படுகிறது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட கட்டுரைகள் மதிப்பீடு செய்த பேராசிரியர்களின் ஆலோசனைப்படி திருத்தம் மேற்கொண்டு மீண்டும் தரம் உறுதி செய்த பின்னரே பி.டி.எப் ஆவணங்களாக இணையத்தில் வெளியிடப்படும். மதிப்பீட்டாளர்கள் கட்டுரைகளுக்குத் தரமான மதிப்புரை வழங்க வேண்டும். நன்முறையில் கட்டுரைகளுக்கு மதிப்புரை வழங்கியவுடன் கருத்து முரண்பாடு இல்லை என்பதைத் தெளிவுறப் பதிவிட வேண்டும். மதிப்பீட்டாளர்கள் கட்டுரைகளில் மேற்கோள்கள் தெளிவுறக் குறிப்பிடாத நிலையில் அதை தெளிவுறச் சுட்டிக்காட்ட வேண்டும். மதிப்பீட்டு செயல்முறையை இரகசியமாகவும் நம்பகமான முறையிலும் செய்ய வேண்டும்.

கருத்துத் திருட்டு நீக்கம்: 

படைப்பாளர்கள் அவர்களின் தகுதிக்கேற்ற மதிப்பை அடையச் செய்வது பதிப்புக்குழுவின் நோக்கமாகும். ஆய்வாளர்களின் படைப்பில் கருத்துத் திருட்டு இருந்தால் பதிப்புக்குழு அக்கட்டுரையை நிராகரித்துவிடும்.

கட்டுரை தேர்வு கொள்கை: 

ஒவ்வொரு ஆண்டும் பெறும் கட்டுரைகளின் ஆய்வுச் செழுமையைக்  கருத்தில் கொண்டு அத்தகைய செம்மையுள்ள 10-20 தமிழ்க் கட்டுரைகளை மட்டுமே வெளியிடுகிறோம். கட்டுரைகளைத் தேர்ந்தெடுப்பதில் ஆசிரியரின் முடிவே இறுதியானது. வணிக நோக்குடனும்  AI போன்ற கணினிப் பயன்பாட்டு செயல்கள் மூலமும் தயார் செய்யப்பட்டு வரும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படாது. அவ்வாறு அனுப்பப்படும் கட்டுரையின் தொடர்புடைய மாணவர்/அறிஞர்/ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க நிறுவனத்தின் உயர் அலுவலர் /புலமுதன்மையர்/முதல்வர் உள்ளிட்டோர்க்குத்  தெரிவிக்கப்படும்.

பதிப்பு நெறிமுறைகள் & முறைகேடு அறிக்கை: 

கட்டுரைகள் ஆய்வுநெறிமுறைகளைப் பின்பற்றாமல் அமைந்தால் பதிப்பகம் நடவடிக்கை எடுக்கும். தரமான ஆய்வு மற்றும் பதிப்பு முறைகளை உறுதி செய்ய தகுந்த முடிவெடுக்கப்படும். ஆய்வுசார் முறைகளில் ஏதேனும் குற்றம் இழைக்கப்படின் அக்கட்டுரை பதிப்பில் இருந்து நீக்கப்படும். கட்டுரைகளில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென்றால் பதிப்பாசிரியருக்கு விண்ணப்பிக்கலாம். கட்டுரை நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல், விளக்கங்கள் மற்றும் மன்னிப்புக்கோருதல் ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிவிப்பு செய்யப்படும். இதழின் முழுக்கோப்பு இண்டர்நெட் ஆர்க்வில் பாதுகாக்கப்படும்.

திறந்தநிலை அணுகல் அறிக்கை

திறந்தநிலை அணுகல் முறை சார்ந்த கொள்கைகளின் படி எமது ஆய்விதழ்களின் சுவைஞர்கள் கட்டுரைகளை நேர்மையான முறையில் தேடவும், வாசிக்கவும், தரவிறக்கம் செய்யவும், நகல் எடுக்கவும், விநியோகிக்கவும், அச்சிடவும் மற்றும் இணைப்பு எடுக்கவும் அனுமதிக்கப்படுகிறது.

AI கருவிகள் மூலம் உருவாக்கப்பட்ட கட்டுரைகளுக்கான கொள்கை

கரிச்சான் பன்னாட்டு பல்நோக்கு தமிழியல்  ஆய்விதழ்  ஆராய்ச்சி மற்றும் கட்டுரை எழுதுவதில் AI ஐப் பயன்படுத்துவதை ஒரு முறையற்ற அணுகுமுறையாகக் கருதுகிறது மேலும் அது கல்வி ஒருமைப்பாடு, தகவலின் உண்மைத் தன்மை மற்றும் சாத்தியமான கூறுகளைப் பற்றிய கேள்வியை எழுப்புகிறது. எனவே, கட்டுரை உருவாக்கத்தில் AI மூலம் எழுத பயன்படுத்தினால், அந்த கட்டுரை தகுதி நீக்கம் செய்யப்படும், மேலும் கட்டுரையாளர் எதிர்கால பதிப்பிற்கான சமர்ப்பிற்கு நிரந்தரமாக தடை செய்யப்படுவார். மதிப்பாய்வாளர்கள் கட்டுரைகளை தணிக்கை/மதிப்புரை செய்யும் பொழுது (பியர் ரிவியூ)  AI ஐப் பயன்படுத்துவதையும் தவிர்க்க அறிவுருத்தப்படுகிறார்கள்.

உரிமம்

எமது ஆய்விதழ் https://creativecommons.org/licenses/by/4.0/ இன்டர்நேசனல் உரிமம்  பயன் கொண்டுள்ளது. இது உண்மையான படைப்புக்களை தகுந்த குறிப்பு முறைகளுடன் பயன்படுத்த, பகிர்ந்தளிக்க மற்றும் மீட்டுருவாக்கம் செய்ய அனுமதிக்கிறது.

This work is licensed under a https://creativecommons.org/licenses/by/4.0/

காப்புரிமை

கட்டுரையாளரிடம் உரிம மாற்றுப் படிவம் பெற்று காப்புரிமையை ஆய்விதழே பெற்றுக் கொள்ளும். படைப்பாளர்கள் அதை தவறான நோக்கத்தில் தவறான பாதையில் பயன்படுத்தி சிக்கல்களை உருவாக்கிக் கொண்டால் அதற்கு இதழின் பதிப்பாசிரியர் பொறுப்பேற்பதில்லை.

KIMTRJ வெளியீட்டு மாதிரி

KIMTRJ இதழ் தொகுதி மற்றும் வெளியீடுகளை வெளியிடுவதற்காக, ஜூலை முதல் ஜனவரி வரையிலான கல்வியாண்டு கால அட்டவணையை (தமிழ் ஆடி மாதம் மற்றும் தமிழ் தை மாதம் முதல்) இந்த இதழ் பின்பற்றுகிறது. இது கரிச்சான் வெளீயீடு மூலம் ஆண்டுக்கு ஆகத்து முதல் பிப்ரவரி வரை இரண்டு இதழ்களை வெளியிடுகிறது.

kimtrj-paper-format-liability-submission-model-paper-copyright-transfer-agreement-.pdf

தொடர்பு மின்னஞ்சல் முகவரி: kimtrj@gmail.comeditorkarichan@gmail.com